ஏன் பச்சோந்தி மாறி இருக்கீங்க நிருபர் கேள்விக்கு VJS பதில்

*VJS பதில்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தற்போது நடித்து வருகிறார். வருடத்திற்கு 5 அல்லது 10 படங்களாவது இவர் நடிப்பில் வெளியாகிறது.

கடந்த சில வருடங்களாக விஜய் சேதுபதியின் மீது பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றது. இதனால் விஜய்சேதுபதியை சிலர் வெருக்கவும் தொடங்கினர். இதை அனைத்தையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணல் வீடியோவில் நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிருபர் “உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. பச்சோந்தியாக இருக்கிறீர்கள் நீங்கள் அதாவது ஒரு சினிமா, வெப் சீரிஸ் அல்லது தொலைக்காட்சி இதில் எதை எடுத்தாலும் அதற்குத் தகுந்த ஒரு பச்சோந்தி போல் மாறிவிடுகிறார்கள். இதை இங்குள்ள நிறைய பேரால் பண்ண முடியுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்கும்போது உங்களுடைய குறிக்கோள், எதை நோக்கி போகிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது” என்று கேட்டார்.

அதற்கு விஜய் சேதுபதி “சினிமா, வெப் சீரிஸ், டிவி முதலில் நீங்கள் இதை எல்லாம் பிறித்து சொல்லுகிறீர்கள் ஆனால் இது எல்லாம் எனக்கு ஒன்றாக தான் தெரிகிறது. ஒருகட்டத்தில் நான் பிரபலமாகி விட்டால் மக்களை வைத்து பணம் சம்பாதிக்க தோன்றிவிடும். நான் இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவில்லை எனக்கு இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறது” என்று கூறினார்.