கோப்ரா ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது- கோப்ராவை பார்க்க சிறந்த 7 காரணங்கள்:-

  • இந்த கட்டுரையில், சியான் விக்ரமின் நடிப்பில் வெளியாகயுள்ள கோப்ரா திரைப்படத்தை பார்க்க சிறந்த 7 காரணங்களை பற்றி பார்க்கவிறுக்கிறோம்.

2022ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பிள் வெளியாகும் கோலிவுட் திரைப்படங்களில் கோப்ராவும் ஒன்று. இப்படத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இமைக்கா நொடிகள் புகழ் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தயாரிப்பு பிரச்சனை காரணமாக, திரைப்படம் நீண்ட காலத்திற்கு தாமதமானது. கடந்த மாதம், ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிப்பு நிறுவணம் படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கியது மற்றும் இந்த படத்தின் விளம்பரங்கள் வேகமாக நடந்தன.

கோப்ரா திரைப்படம் வெளியாகும் தேதி:-

கோப்ரா திரைப்படத்தின் பாடல்கள் அதீரா மற்றும் தும்பி துள்ளல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இந்தப் படத்தின் இசை ஆல்பம் வெளியாகி வைரலானது, மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டீசரில் சியான் விக்ரம் கணிதவியலாளராகவும், இர்ஃபான் பதான் கெட்டப் பாத்திரமாகவும் நடித்துள்ளனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, படம் அதன் வெளியீட்டு தேதியைப் பெற்றது. திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பிறந்தநாளையொட்டி, வெளியீட்டு தேதியை ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தி வார இறுதியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வறவேர்ப்பை பெற்றால், நீண்ட வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

கோப்ரா திரைபடத்தின் பட்ஜெட்:-

சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் நடித்த கோப்ரா திரைப்படத்தை ஆர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது மற்றும் இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 90+ கோடிகள். ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

கோப்ரா திரைப்பட நடிகர்கள்:-

கோப்ரா திரைப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் K.S ரவிக்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளன. இந்தப் படத்தில் இர்பான் பதான் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். மிர்னாலினி ரவி, மியா ஜார்ஜ், சர்ஜானோ காலித், மீனாட்சி கோவிந்தராஜன். மேலும் இந்த படத்தில் ரோஷன் மேத்யூ துணை வேடத்தில் நடிக்கின்றனர்.

கோப்ரா திறைப்படத்தை பார்க்க 7 சுவாரஸ்யமான காரணங்கள்:-

  • இந்தப் படத்தைப் பார்க்க முக்கியக் காரணம் சியான் விக்ரம். கொரோனா ஊரடங்கின் பிறகு இவரது முதல் திரைப்படம் திரையில் வெளியாகிறது.
  • இன்னொரு முக்கிய காரணம் ஸ்ரீநிதி ஷெட்டி. கேஜிஎஃப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கோலிவுட் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
  • பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.
  • ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், ஏற்கனவே வைரலாகியிருக்கும் பிஜிஎம் படத்தின் எதிர்பார்ப்புகளின் மையப் புள்ளியாக இருக்கிறது.
  • சியான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்துடன் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
  • இயக்குனர் ஆர். அஜய் ஞானமுத்துவின் முந்தைய படங்களான டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகியவை தனித்துவமான கதைக்களம் கொண்ட பிளாக்பஸ்டர்ஸ் ஆகும். இதனால் சீயானின் ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
  • இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் ஆகும், இது பல்வேறு மாநிலங்களின் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.