1 இல்ல 2 இல்ல பல விருதுகளைப் பெற்ற சிம்பு படம்

*பல விருதுகளைப் பெற்ற சிம்பு படம்*

பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் சிம்பு தற்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் மாநாடு.

மாநாடு திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மேலும் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி, YG மகேந்திரன், பிரேம்ஜி மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பல பிரச்சனைகளுக்கு பிறகு மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியானது. கடந்த வருடம் நவம்பர் 25ஆம் தேதி மாநாடு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது.

தற்போது மாநாடு திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது Norway நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் மாநாடு திரைப்படம் 4 விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த இயக்குனர் வெங்கட் பிரபு, சிறந்த இசை அமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா, சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா மற்றும் படத்தின் எடிட்டர் பிரவீனுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.