புஷ்பா படத்தின் 3வது நாள் வசூல்?

*புஷ்பா*

2021 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று அல்லு அர்ஜுனின் புஷ்பா: தீ ரைஸ். ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் ஃபாசில் இப்படத்தில் நடித்துள்ளனர். எனக்கு சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது.

புஷ்பா உலகெங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் ஆரம்ப வசூல் ரூபாய் 66.51 கோடி வசூலித்தது. மேலும் படம் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பாக ஓடியுள்ளது. இதனால் இப்படம் முதல் வார இறுதியில் 150 கோடியை கடந்து உள்ளது.

*புஷ்பா பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன்*

  • முதல் நாள் (வெள்ளிக்கிழமை): ரூபாய் 66.51 கோடி வசூல்.
  • இரண்டாம் நாள் (சனிக்கிழமை): ரூபாய் 48.64 கோடி வசூல்.
  • மூன்றாம் நாள் (ஞாயிறு): ரூபாய் 50.24 கோடி வசூல்.
  • மொத்தம் (உலகம் முழுவதும்): ரூபாய் 165.38 கோடி வசூல் (அனைத்து மொழிகளிலும்).

தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள திரைப்படங்கள் பெரிய அளவில் முன்னணியில் இருப்பதாக அறியப்படுகிறது.