உலகின் 4 வழமையான குழந்தைகள்..?

*வழமையான குழந்தைகள்*

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் விளையாட்டுத்தனமாக தான் இருப்பார்கள். குழந்தைகளுக்கு சிறிய காயம் பட்டாலும் அவர்களால் தாங்க முடியாது அதனால் நிறைய பெற்றோர்கள் அவர்களை பக்குவமாக பார்த்து வளர்ப்பார்கள்.

ஆனால் சில குழந்தைகள் வயதுக்கு மீறின பளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு 4 குழந்தைகளை இதில் பார்க்கலாம்:

  • அராத் ஹொசைனி – பார்ப்பதற்கு பெண் குழந்தை போல் இருப்பார் ஆனால் இவர் ஒரு ஆண் குழந்தை. இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இந்த வயதிலும் கடும் ஃபிட்னஸ் உடன் சிக்ஸ்பேக்ஸ் கொண்டிருப்பார்.
  • ஆண்ட்ரி கோஸ்டாச் – இவர் ஒரு ஆண்குழந்தை இவர் தனது ஐந்து வயதிலிருந்தே உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருகிறார். இவரால் ஒரே நேரத்தில் 3000 புஷ்-அப்ஸ்களை எடுக்க முடியும் இது அவருடைய உடம்பு தோற்றத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
  • யாங்ஜின்லாங் – இந்த குழந்தை குண்டாகத் தான் இருப்பார் ஆனால் இவரால் 100 கிலோ எடை உடைய நபரை தூக்க முடியும் அதுமட்டுமில்லாமல் 200 கிலோ உடைய காரை கூட கயிறால் கட்டி இவரால் இழுக்க முடியும். பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் இவர் செய்து காட்டுவார்.
  • ரியூசி இமாய் – இவரை லிட்டில் புரூஸ்லி என்றே கூறலாம். இவர் தனது வேகமான மூவ்மெண்ட்களால் பிரபலமானவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இவரை அழைத்தனர் அதில் இவர் தனது ஒரு விரலால் புஷ்-அப்ஸ் எடுத்து செய்து காட்டி அசத்தியுள்ளார்.