இந்திய ரூபாய்களை உருவாக்க 4900 கோடியா..?

*இந்திய ரூபாய்*

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் அன்றாட வாழ தேவையான ஒன்று பணம். பணம் மூலமாகத்தான் நம் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும். பணம் இல்லையென்றால் வாழ்வது கடினம்.

பணத்தால் நாம் எல்லா விலையுள்ள பொருட்களையும் வாங்கி விட முடியும் ஆனால் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இந்த பணத்தை அச்சடிப்பதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று?

இந்தியாவில் பணத்தை அச்சடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எவ்வளவு செலவாகிறது என்று பார்க்கலாம்:

  • 1 ரூபாய் நாணயம் உருவாக்க செலவிடக்கூடிய மதிப்பு ரூபாய் 1.11 பைசா.
  • 2 ரூபாய் நாணயம் உருவாக்க செலவிடக்கூடிய மதிப்பு ரூபாய் 1.28 பைசா.
  • 10 ரூபாய் நாணயம் உருவாக்க செலவிடக்கூடிய மிதிப்பு ரூபாய் 5.54 பைசா.
  • 500 ரூபாய் நோட்டை உருவாக்க செலவிடக்கூடிய மதிப்பு ரூபாய் 2.57 பைசா.
  • 2000 ரூபாய் நோட்டை உருவாக்க செலவிடக்கூடிய மதிப்பு ரூபாய் 4.18 பைசா.

இந்திய அரசாங்கம் 2018ஆம் ஆண்டு மட்டும் இந்திய ரூபாய் நாணயங்கள் மற்றும் நோட்டுகளை அச்சடிப்பதற்காக ரூபாய் 4900 கோடி செலவிட்டுள்ளது.