*5 சிறந்த ஸ்மார்ட் ஃபோன்*

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள் மனிதர்கள் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் புதிதுபுதிதாக மாதமாதம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தால் பல மாடல்களின் வெளியீடு தள்ளிப்போனது.
தற்போது இந்த 2022 ஆம் வருடம் வெளியிடாமல் இருந்த மாடல்கள் அனைத்தும் ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ளது. அதில் சிறந்த 5 ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி இதில் பார்ப்போம்.
Samsung Galaxy S21 FE
இந்த மாடல் கடந்த சில மாதங்களாக ஜனவரியில் வெளியாகப் போகிறது என்று தகவல்கள் வெளிவந்தது. Snapdragon 888 Processorவுடன் இந்த மாடல் வரப்போகிறது மற்றும் நான்கு வண்ணங்கள் உள்ளன. இந்த மாடலிள் உள்ள அனைத்தும் Top Specifications என்றே கூறலாம்.
One Plus 10Series
இந்தியாவில் One Plus நிறுவனத்தின் தரப்பிலிருந்து ஜனவரியில் ஏதாவது ஒரு அறிக்கை வெளிவரும் ஆனால் இந்தியாவில் One Plus 10 series வெளியாகப் போவதில்லை என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் One Plus 10 series வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது.
Vivo V23 Series
இந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 அல்லது 3 வேரியண்ட்டுகள் வருவதாக கூறியுள்ளார்கள். Pro Variantல் Color Chaning Back Panel இருப்பதாகக் கூறி உள்ளார்கள். இந்த மாடல் டிசைனிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். இதனுடைய Back Panel திரும்பத்திரும்ப கலர் கலராக மாற கூடியதாக இருக்கும்.
IQ 9 Series
IQ 9 Series மாடலில் புதிதாக Snapdragon 8 Gen 1 என்ற Processor புதிதாக பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் முன் இருந்தது போலவே பிரமாதமாக இருக்கும் என கூறப்படுகிறது.
OPPO Reno 7 Series
இந்த மாடல் இந்தியாவில் ஜனவரி மாதத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. இந்த மாடலில் 3 Variants வரலாம் என கணிக்கப்படுகிறது.