5 UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் தெரியுமா?

*UPI பேமெண்ட்*

Gpay, Phonepe, Paytm போன்ற UPI கட்டணப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறீர்களா? இந்தக் கருவிகள் நமது பரிவர்த்தனை முறைக்கு வசதிகளை கொண்டுவரும் அளவுக்கு அவற்றில் சில நன்மைகளும் மற்றும் தீமைகளும் உள்ளன. அதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

எனவே இது போன்ற பயன்பாடுகள் இருக்கும்போது இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும்.

சீரற்ற இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்ற அத்தியாவசிய பரிவர்த்தனை விவரங்களை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும்.

UPI பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்ற நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் கீழ் உள்ளன:

  • உங்கள் PIN யை பகிர வேண்டாம் (PIN என்பது முக்கியமான ஒன்று அதை வைத்துதான் நீங்கள் பரிவர்த்தனை செய்ய முடியும் ஏனெனில் அதை யாருக்கும் பகிராமல் இருக்க வேண்டும்).
  • வலுவான கடவுச்சொல்லை(Password) பயன்படுத்தவும்.
  • சரி பார்க்கப்படாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
  • உங்கள் பரிவர்த்தனை முறையை எளிதாக வைத்திருங்கள்.
  • UPI பயன்பாட்டை தொடர்ந்து புதுப்பிக்கவும்.