Bill Gatesக்கு நடந்த 5 ரூபாய் சோதனை..?

*5ரூபாய் சோதனை*

உலகில் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ். பில்கேட்ஸ் என்னும் பெயரைக் கேட்டாலே உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் அவர் யார் என்று.

வில்லியம் ஹென்றி கேட்ஸ் ||| என்பது இவருடைய முழுப்பெயர் ஆகும். மைக்ரோசாப்ட் என்னும் நிறுவனத்தை நிறுவியது இவர்தான்.

பில் கேட்சுக்கு நடந்த ஐந்து ரூபாய் சோதனை என்னவென்று பார்ப்போம்?

பில்கேட்ஸ் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்து விட்ட பிறகு அவர் சாப்பிட்டதற்குரிய $500 டாலர்ஸ் வந்துள்ளது.

அந்த $500 டாலரை அவர் செலுத்திவிட்டு அவருக்கு சாப்பாடு பரிமாறிய ஊழியருக்கு $5 டாலர்கள் டிப்ஸாக வழங்கியுள்ளார்.

அந்த ஊழியர் என்ன இவர் வெறும் $5 டாலர்கள் மட்டும்தான் கொடுக்கிறார் என்று சலிப்பாக பார்த்துள்ளார். அதை கவனித்த பில்கேட்ஸ் என்னவென்று அந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஊழியர் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் உங்களுடைய மகள் இங்கு வந்து சாப்பிட்டார் அவரும் உங்களைப்போல் $500 டாலர்களுக்கு தான் சாப்பிட்டார் ஆனால் எனக்கு டிப்ஸ் மட்டுமே $500 டாலர்கள் கொடுத்தார். நீங்கள் அவருடைய அப்பா அதுமட்டுமில்லாமல் இந்த உலகத்திலேயே கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நீங்கள் வெறும் $5 டாலர்கள் கொடுப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை அதனால்தான் நான் அப்படி பார்த்தேன் என்றார் அந்த ஊழியர்.

அதற்கு பில்கேட்ஸ் திரித்துக் கொண்டபடியே கூறினார், நீங்கள் சொல்வது சரிதான் அந்தப் பெண்ணின் அப்பா ஒரு கோடீஸ்வரர் தான் அதனால் அந்தப் பெண் உங்களுக்கு $500 டாலர்கள் கொடுத்திருக்கிறார் ஆனால் என்னுடைய அப்பா ஒரு மரம் வெட்டுபவர் பணத்துடைய அருமை எனக்கு என்னவென்று தெரியும் அதனால் தான் உங்களுக்கு நான் வெறும் $5 டாலர்கள் டிப்ஸாக கொடுத்தேன் இதுவே அதிகம் என்றார்.

இதே போல் தான் நிறைய நபர்கள் அவர்கள் அப்பா அம்மா நிறைய காசு வைத்திருக்கிறார்கள் என்று இஸ்டப்படி செலவு செய்கின்றன ஆனால் அதை சம்பாதிப்பதற்க்கு அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.