செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களில் 90% பேர் தோல்வி..!

*சாலை மறியல் செய்த மாணவர்கள்*

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை மதிப்பெண் குறிப்பிடப்படாமல் 90% பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செமஸ்டர் தேர்வை சுமார் 500 மாணவர்கள் எழுதினர் இதில் 90 சதவீதம் பேர் தோல்வி என முடிவுகளை பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் கல்லூரி முன்னால் உள்ள சாலையில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர்.

இதனையடுத்து வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மாணவர்களை கல்லூரியின் இயக்குனர் குமாரன் அவர்களிடம் பேசுமாறு கூறினார்.

இதைப்பற்றி மாணவர்களிடம் கேட்டபோது “எங்களுக்கு எதனால் தோல்வி என தெரியவில்லை அதை அறிவிக்கவும் இல்லை இதனால் இதைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்