பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தன் காதலியை பார்க்க மும்பை வந்துள்ளார்!

*இந்திய பாக்கிஸ்தான் காதல்*

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அமீர் என்பவர் தன் காதலித்த பெண்ணை சந்திக்க எல்லை வேலியை கடந்து மும்பை வந்துள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான பஹவல்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரின் எல்லை வேலியைத் தாண்டியதால் கைதுசெய்யப்பட்டார்.

முகமது அமீர் அந்த எல்லை காவலர்களிடம் கூறியது “நான் முகநூல் வழியாக பழகி பிறகு காதலில் விழுந்த பெண்ணை பார்க்க மும்பை செல்கிறேன்” என்றார்.

மாவட்டத்தின் 10 தாலுகாக்களில் ஒன்றான அனுப்கரில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ரோந்துக் குழுவினரால் சனிக்கிழமை பிடிபட்டபோது அந்த இளைஞனிடம் மொபைல் போன் மற்றும் சில கரன்சி நோட்டுகள் மட்டுமே இருந்தன என்று ஸ்ரீ கங்கநாதர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

விவரங்கள் இன்னும் திட்டவட்டமாக உள்ளன. பாதுகாப்பு ஏஜென்சிகள் அவரது பதிப்பை இன்னும் சரி பார்க்கவில்லை என்று சர்மா வலியுறுத்தினார். உளவுத்துறை அதிகாரிகளின் கூட்டுக்குழு செவ்வாய்க்கிழமை அவரை விசாரிக்க தொடங்கும். மேலும் அவர் கூறிய ஒவ்வொரு கூற்றையும் குறுக்கு விசாரணை செய்யும்.

பஹவல்பூர் மாவட்டத்திலுள்ள ஹசில்பூர் தாலுகாவைச் சேர்ந்த முகமது அமீர் என்று தன்னை அடையாளப்படுத்திய அந்த நபர், முகநூலில் சந்தித்த மும்பையை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்ததாக சர்மா கூறினார்.

காலப்போக்கில் அவர்கள் நல்ல நண்பர்களாகி எண்களை பரிமாறிக் கொண்டனர். அவருடைய பதிப்பின் படி அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

தொலைதூர எல்லையில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மும்பைக்கு அவர் எப்படி பயணிக்க நினைத்தார்? இதைப்பற்றி அவரிடம் நாங்கள் கேட்டபோது முகமது அமீர் கூறியது “நான் மும்பைக்கு நடந்துசென்றிருப்பேன்” என்றார்.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அவர் எப்படி வந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அமீர் வசிக்கும் ஹசில்பூர் தாலுகா சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ளது.

மும்பையில் உள்ள பெண்ணை இன்னும் அணுகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமீரின் கூட்டு விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் இது செய்யப்படும்.

மும்பை பெண் இப்போதைக்கு அமீர் சந்திக்க வாய்ப்பில்லை.

இளைஞர் கூறிய கதை உண்மையாக இருந்தால் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்றால் அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று அந்த இளைஞனுக்கான சிறந்த சூழ்நிலையை கோடிட்டு காட்டினார் சர்மா.