முதல் Finalist ஆக அமீர் வெற்றி

*அமீர்*

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 80 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வீட்டிற்குள் பிரியங்கா, ராஜு, சஞ்சீவ், தாமரை, நிரூப், பாவணி, சிபி, அமீர் விளையாடிக் கொண்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக Finalக்கு செல்ல Ticket to Finale வேல்வதற்க்கான போட்டி வைத்து வெற்றி பெறுபவர்களை Finalக்கு அழைத்துச் செல்வார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் Ticket to Finale போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்களுக்கு சண்டையும் மோதலும் ஏற்பட்டது. குறிப்பாக தாமரை பிரியங்கா இருவருக்கும் கை சலசலப்பு ஏற்பட்டது.

முதல் போட்டியில் நிரூப் வெளியேற்றப்பட்டார், இரண்டாவது போட்டியில் பாவணி மற்றும் தாமரை வெளியேற்றப்பட்டனர், மூன்றாவது போட்டியில் ராஜு மற்றும் பிரியங்கா வெளியேற்றப்பட்டனர்.

இறுதி போட்டியில் அமீர், சிபி, சஞ்சீவ் இவர்கள் 3 பேரும் கலந்து கொண்டனர். இது அமீர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் உண்மையான பதில்களைச் சொல்லி வெற்றி பெற்றார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 முதல் இறுதி போட்டியாளராக Ticket to Finale வைத்து அமீர் தேர்வாகியுள்ளார். அமீர் Wild Card Entry மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.