அபிஷேக் ராஜா | போட்டு உடைத்த உண்மை.

அபிஷேக் ராஜா உடைத்த உண்மை பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் கண்கலங்க வைத்தவர் தான் நமிதா மாரிமுத்து.

சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தான் திருநங்கைகள். சமுதாயத்திலிருந்து உலக அளவில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 ஹவுஸில் போட்டியாளராக நுழைந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் ஆரம்பித்த ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அந்த தவிர்க்க முடியாத காரணம் என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

சிலர் பல பல காரணங்களை கூறி வருகின்றனர் ஆனால் பிக்பாஸ் இடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நமீதா மாரிமுத்து என்ன ஆனார் என்று தெரியவில்லை அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதைப்பற்றி முதல் போட்டியாளராக வெளியேறிய நாடியா சாங் இடம் கேட்டபோது அவரும் இதை பற்றி பேசுவதற்கு மறுத்துவிட்டார். இதனால் நமீதா ஏன் வெளியேறினார் என்பதை ரகசியமாகவே உள்ளது.

இதனை அடுத்து இரண்டாவது போட்டியாளராக வெளியேறிய அபிஷேக் ராஜா வெளியேறிய 4 நாட்களில் பல யூடியூப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுத்து வந்தார். அப்போது அவரிடம் நமீதா மாரி முத்து ஏன் வெளியேற்றப்பட்டார் என்று கேட்டபோது அவரை அறியாமலேயே உண்மையை பேசினார்.

அபிஷேக் ராஜா கூறியது என்னவென்றால் நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து டெர்மினேட் செய்யப்பட்டார் என்று கூறினார். மேலும் அவர் கூறியது நமிதா டெர்மினேட் ஆன நாளன்று வீட்டுக்குள் பரபரப்பாகவும் ஒரு கட்டத்தில் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் இருந்ததாக கூறினார். அதுமட்டுமில்லாமல் நாடியா சாங்கை அவர் ஒரு கீரைகட்டை போல் தூக்கிவந்து வெளியில் போட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இதைப் பற்றி நமிதா மாரிமுத்து பேசட்டும் பிறகு நான் பேசுகிறேன் என்றார்.

இதன் மூலமாக நமிதா மாரிமுத்து அன்று பெரிய கலவரத்தை செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

மேலும் அனைத்து போட்டியாளர்களுடன் சண்டை போட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால்தான் நமிதா மாரிமுத்து இதைப்பற்றி வெளியில் பேசாமல் அமைதி காக்கிறார் எனக் கூறப்படுகிறது.