உலகின் தலைசிறந்த 5 நிறுவனங்களின் பேறிளப்பை பற்றி..?

*5 நிறுவனங்கள்*

முதலில் நாம் காண இருப்பது அடிடாஸ் மற்றும் பூமா நிறுவனங்கள். அடிடாஸ் நிறுவனத்தின் முதலாளி அட்ஆல்ப் டாஸ்லர் மற்றும் பூமா நிறுவனத்தின் முதலாளி ருடால்ப் டாஸ்லர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஒரு சொத்துப் பிரச்சனையினால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஒரு நதியின் இருவேறு கரைகளிலும் நிறுவனங்கள் அமைந்துள்ளன ஒரு ஊரின் ஊழியர்கள் மட்டுமே அடிடாஸ் நிறுவனத்திலும் மற்றொரு ஊரின் ஊழியர்கள் மட்டுமே பூமா நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற சூழல் எல்லாம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இருவருக்குமிடையில் ஒத்துப் போகவே போகாதாம். இவ்விருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி தற்பொழுது உலகின் தலை சிறந்த நிறுவனமாக நைக் உள்ளது. தொழில் சார்ந்த வல்லுனர்கள் கூறுகையில் அடிடாஸ் மற்றும் பூமா இணைந்து பணியாற்றி இருந்திருந்தால் இவ்விரு நிறுவனமும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள். அடிடாஸ் மற்றும் பூமா இருவருக்கும் இடையில் உள்ள கடும் போட்டியினாலேயே இவ்விரு நிறுவனங்களாலும் அவர்கள் நினைத்த முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.

இரண்டாவதாக கொக்ககோலா மற்றும் பெப்சி நிறுவனங்களின் வீழ்ச்சியைப் பற்றி காணலாம். கொக்ககோலா என்னும் மதுபானம் 1857ஆம் ஆண்டு ஒரு மருந்து தயாரிப்பாளரால் கண்டறியப்பட்டது. வெவ்வேறு கெமிக்கல் கலவைகளை ஊற்றிய பின் தயாரானது கொக்ககோலா இது குடிக்க மிகவும் நன்றாக இருப்பதினால் இதை மருந்தாக பயன்படுத்தாமல் ஒரு குளிர்பானமாக பயன்படுத்தலாம் என்று அவர் நினைத்துள்ளார்.

அதன் பின்னர் அதனை குளிர்பானமாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார் இந்த முறையிலேயே கொக்ககோலா முதன்முதலில் உலகிற்கு அறிமுகமானது. பின்னர் சிறிது காலத்திலேயே பெப்ஸி என்ற நிறுவனம் இதுபோன்றே ஒரு குளிர்பானத்தை கொண்டுவந்து கொக்கோகோலா விற்கு போட்டியாக அமைந்தது. பின்னர் இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அதன் ஒரு பங்காக இவ்விரு நிறுவனங்களின் விளம்பரங்களில் கடும் சண்டை நிலவியது. அதில் ஒரு அங்கமாக ஒரு பெண் கண்ணை கட்டிக்கொண்டு கொக்ககோலா மற்றும் பெப்சி இவ்விரண்டையும் கொடுத்துவிட்டு பெப்சி நன்றாக இருப்பது போல பெப்சி ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அதன்பிறகு கொக்ககோலாவும் ஒரு பனிக் கரடியை வைத்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

இவ்விரு விளம்பரங்கள் வெளியாகும் காலங்களில் இவ்விரண்டிற்கும் இடையே ஒரு போட்டி நிலவும். பின்னர் பெப்சி நிறுவனம் 700000 பெப்ஸி மூடிகளை கொண்டு வந்தான் ஒரு ஜெட் பரிசாக வழங்கப்படும் என்று ஒரு விளம்பரம் செய்தது.

இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள் என்று பெப்சி நிறுவனம் நினைத்தது ஆனால் ஒருவர் பல முதலீட்டாளர்களை ஈர்த்து 700000 பெப்ஸி மூடிகளை கொண்டு பெப்சி நிறுவனத்திடம் சென்று ஜெட்டை தருமாறு கேட்டுள்ளார் இந்தப் பிரச்சனையினால் பெப்சிக்கு பேரிழப்பு ஏற்பட்டது.

மற்றுமொரு பெப்சி நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒரு பெப்ஸி மூடியில் 349 என்ற எண் கொண்டிருக்கும் அதனை கொண்டு வந்து கொடுப்பவருக்கு 30 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தது பின்னர் பெப்சி நிறுவனமும் ஒரு மதுபானத்தின் மூடியில் அச்சிட திட்டமிட்டது ஆனால் ஒரு இயந்திர கோளாறு காரணமாக சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மதுபானங்களின் மூடியில் அந்த எண் பதிவிடப்பட்டது. இதனால் அந்த எண் உள்ள மதுபானம் கிடைத்த பலரும் பெப்சி நிறுவனம் இடம் பணத்தை கேட்டு பல போராட்டங்கள் நடத்தினர்.

இதனால் பெப்சி நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டது. ஒரு சிறிய தவறினால் பெப்சி நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

மூன்றாவதாக நோக்கியா நிறுவனம் சந்தித்த வீழ்ச்சி. நோக்கியா நிறுவனம் 1965ஆம் ஆண்டு பின்லாந்தை சேர்ந்த பெடரிக் என்பவரால் தொடங்கப்பட்டது.பின்லாந்தில் உள்ள ஒரு ஆறு அதன் பெயர் நோக்கியன் பெட்டரா. இந்த ஆறு அருகில் முதன் முதலாக ஒரு மர நிறுவனமாக தொடங்கப்பட்டது நோக்கியா நிறுவனம். பின்னர் சிறிது சிறிதாக முன்னேறி தொலைக்காட்சிக்கு பொருட்கள் வழங்கும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது.

சிறுது காலங்களுக்குப் பிறகு தொலைபேசியின் பரிணாம வளர்ச்சி நாள் நோக்கியா நிறுவனம் தொலைபேசி தயார் செய்யும் நிறுவனமாக உருவெடுக்கத் தொடங்கியது. அதன்பின்னர் அந்த நிறுவனம் பல தொலைபேசிகளை உற்பத்தி செய்து உள்ளது இந்த தொலைபேசிகள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது பல ஆண்டுகள் நோக்கியா நிறுவனம் தலை சிறந்த நிறுவனமாக வலம் வந்து கொண்டிருந்தது.

ஆனால் 2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் ஐஓஎஸ் எனப்படும் புதிய தொலைபேசி செயல்பாட்டு முறை கொண்டு வரப்பட்டது. மற்றும் சாம்சங் நிறுவனத்தினால் ஆண்ட்ராய்டு எனப்படும் தொலைபேசி செயல்பாட்டு முறை கொண்டு வரப்பட்டது. இதனை பெரிதாக கண்டுகொள்ளாத நோக்கியா நிறுவனம் ஹார்டுவேர் தொழில்நுட்பத்தில் நம்மை மிஞ்ச யாரு உள்ளார் என்று இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சியை சிறிதும் பொருட்படுத்தாமல் நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வந்தது.

2007 ஆம் ஆண்டிலிருந்து நோக்கியா நிறுவனம் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. பின்னர் முதன்முதலாக 2011ஆம் ஆண்டு தான் நோக்கியா நிறுவனம் மைக்ரோசாஃப்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தை தொலைபேசியில் கொண்டுவந்தது ஆனால் அது மக்களிடையே அவ்வளவாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை அதனால் நோக்கியா நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

அப்பொழுது நோக்கியா நிறுவனத்தின் சிஇஓ வாக இருந்த எலோப் என்றவர் அவரது பேட்டியில் நோக்கியா நிறுவனத்தின் தோல்விக்கு பல காரணங்களை கூறி இருந்தார் அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது திறமையை விட ஒற்றுமையின்மையும் கவனக்குறைவும் ஒரு நிறுவனத்தை பலமடங்கு வீழ்ச்சியை சந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார். இது நோக்கியா நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் பல நிறுவனத்திற்கும் அவர் கூறியது பொருந்தும்.