நடிகர் அஜித்தின் | வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..?

*நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப்*

நடிகர் தல அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ன என்பதை வலிமை திரைப்பட நடிகரான ராஜ் ஐயப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது இதில் நடிகர் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அவருக்கு தம்பியாக ராஜ் ஐயப்பா நடித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் அனுமதிபெற்று அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்யை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார் ராஜ் ஐயப்பா.

அந்த ஸ்டேட்டஸில் நடிகர் அஜித் தெரிவித்திருந்தது ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் என்பது தனிமனித பொருளாதார நிலையை குறிக்கிறதை தவிர குணத்தை இல்லை. சமூகத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் அதனால் ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவது நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாத நடிகர் அஜித் வாட்ஸ்அப் பயன்படுத்துவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.