நடிகையால் சிக்கலில் சிக்கியுள்ள நடிகர் விஷால்

*நடிகர் விஷால்*

நடிகர் விஷால் மற்றும் நடிகை டிம்பிள் ஹயாதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வீரமே வாகை சூடும். இப்படம் பொங்கலன்று வெளியாவதற்காக தயாராக இருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் ஜனவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் படத்தில் நடித்துள்ள கதாநாயகி டிம்பிள் ஹயாதிக் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சமூகவலைதளங்கள் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் டிம்பிள் ஹயாதி மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன், மீண்டும் வலிமையோடு வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் எதற்கும் விளம்பரங்கள் பெரிதாக செய்யாததால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு இப்போதே விளம்பரங்களை செய்தால் தான் நல்லது என்ற நிலையில் தற்போது படத்தின் கதாநாயகிக்கு கொரோனாவால் படத்தின் விளம்பரப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது, நடிகர் விஷால் இதனால் சோகத்தில் உள்ளார் என்று தகவல் கூறுகிறது.