நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு

*நிக்கி கல்ராணி*

டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகியாக இருந்த வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்ற நபரை நியமித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 11-ஆம் தேதி நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் சந்தேகத்திற்கு இடமாக சில பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நிக்கிகல்ராணி வீட்டில் சோதனை செய்த பிறகு விலை உயர்ந்த கேமரா, ரூபாய் 40000 பணம், துணிகள் மற்றும் பொருட்கள் காணாமல் போனதைக் கண்டு நிக்கி கல்ராணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன் தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார் அப்போது தனுஷ் பொருட்களை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தனுஷ் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை போலீசார்கள் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து திருடியதாகவும் பின்னர் அதை கோவையில் ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் நண்பன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். போலீசார்கள் தனுஷை சென்னை அழைத்து வந்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment