மிண்டும் மஞ்சப்பை மாஸ் கட்டும் முதலவர்..?

*மிண்டும் மஞ்சப்பை*

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை தமிழக அரசாங்கம் தடை செய்தது. இதனால் எந்த கடையிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை.

ஆனாலும் சிறு இடங்களில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைப் பெரிதும் யாரும் கண்டு கொள்வதில்லை.

தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதற்கான ஒரு தீர்வை அமைத்துள்ளார். மீண்டும் மஞ்சப்பையை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு இயக்கத்துடன் மீண்டும் மஞ்சப்பை என்ற பெயரில் மஞ்சப்பையை முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு இயக்கத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்றுப் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார். இதில் மேய்யநாதன், தயாநிதிமாறன் எம்பி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முக ஸ்டாலின் கூறுகையில் “தமிழகத்தில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மஞ்சப்பை சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்“.