வயது 4 தான் சாதனைகள் மிக பெரிது நம்ம ஊர் பையன்..!

*மாயன்*

அதீத நினைவு ஆற்றலை கொண்ட சிறுவன் மாயன். இச்சிறுவன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் வசித்து வரும் பாலாஜி மற்றும் நந்தினி தம்பதியினரின் இரண்டாவது மகன் ஆவான். இன்றைய காலத்தில் சிறுவர்கள் பேசுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் இச்சிறுவன் தனது 2 1/2 வயதில் இவ்வளவு ஞாபக சக்தி கொண்டு உள்ளது வியப்பாக உள்ளது.

இச்சிறுவன் ஏதாவது ஒரு படத்தையோ அல்லது எழுத்தையோ பற்றி சொல்லிக் கொடுத்தாள் அதை எத்தனை நாள் ஆகி கழித்துக் கேட்டாலும் யோசிக்காமல் உடனே சொல்லிவிடுவான். இதை புரிந்துகொண்ட மாயனின் பெற்றோர்கள் அவனுக்கு பயிற்சிகள் அளித்துள்ளனர்.

247 தமிழ் எழுத்துக்கள், தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், எண்கள், வடிவங்கள், மாநிலத்தின் தலைநகரங்கள், பழங்கள், பல தலைவர்களின் புகைப்படங்களை ஒரு ஆல்பமாக செய்து அச்சிறுவனுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்.

இவை அனைத்தையும் மாயன் வேகமாக கற்றுக்கொண்டு மழலைக் குரலில் கூறினான். இதை அனைத்தையும் ரெக்கார்ட் செய்து கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முகவரிக்கு அனுப்பியுள்ளன.

இதை அவர்கள் உறுதிசெய்து கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மாயன் பெயர் இடம்பெற்றது. இதனால் இரு சாதனை புத்தகங்களிலும் இவரின் பெயர் இடம்பெற்றது.

இதைப்பற்றி மாயனின் பெற்றோரின் அவரிடம் கேட்டபோது அவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்தனர். மேலும் இவர் பல சாதனைகளை செய்வதற்கு நாங்கள் எங்கள் உதவிகளையும் உறுதுணையாகவும் இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்

Leave a Comment