ஏஜென்ட் கண்ணாயிரம்-Official Teaser

*ஏஜென்ட் கண்ணாயிரம்*

நடிகர் சந்தானம் இயக்கத்தில் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இதில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த், ரிடின் கிங்ஸ்லே, இ ராம்தாஸ், இந்துமதி, மதன், ஆதிரா போன்றவர்கள் துணை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரசன்னா ஜேகே இப்படத்தை தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது யூட்யூப் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. Think Music India என்ற யூடியூப் பக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இந்த முன்னோட்டம் 2 நிமிடம் 1 நொடி நேரம் வரை உள்ளது. இதில் நடிகர் சந்தானம் ஒரு ஏஜென்ட் போல் உள்ள கதாபாத்திரமாக நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை கூடியவிரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.