*விருந்தளித்த ஐஸ்வர்யா*

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் பிரியப் போகிறோம் என்ற அறிவிப்புக்குப் பிறகு ஐஸ்வர்யாவின் புகைப்படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. மியூசிக் வீடியோ விற்காக ஐஸ்வர்யா தனது குழுவுடன் தயாராகும் புகைப்படத்தை Bayfilms அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த மியூசிக் வீடியோ காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளனர்.
தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா, அவருடைய இரண்டாவது படம் தமிழ் திருட்டு நகைச்சுவை வை ராஜா வை திரைப்படம். 2017 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் Stuntmenகளின் வாழ்க்கையைப் பற்றி சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தை இயக்கினார்.
கடந்த வாரம் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரிந்த செய்தியை அறிவித்தார் தனுஷ். மக்கள் தங்கள் முடிவை மதிக்க வேண்டும் மற்றும் எங்களுக்கு சில தனியுரிமை கொடுக்க வேண்டும் என்று தனுஷ் வலியுறுத்தினார். இதே கருத்தை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதியருக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.