வலிமை டிரெய்லர் இப்போ Release பண்ண வேண்டாம் அஜித் முடிவு?

*வலிமை டிரெய்லர்*

நடிகர் அஜித் குமார் நடித்து ஹச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் “வலிமை“. இப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை ரசிகர்கள் ஆங்காங்கே கேட்டவண்ணம் வந்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வோன்றாக வந்துள்ளது. இறுதியாக இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்போது ரசிகர்கள் இப்படத்தின் டிரைலரை வெளியிடுமாறு கூறிவருகின்றனர். இப்படத்தின் டிரைலர் 2.50 நிமிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. படம் வெளியாக கிட்டதட்ட 20 நாட்களே உள்ளன இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது.

ட்ரெய்லரை ஏன் வெளியிடாமல் உள்ளார்கள் என்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் படத்திற்கு ஓவர் பில்டப் வேண்டாம். தீடிரேன ஓவர் பில்டப் செய்தால் அது நல்லா இருக்காது. இதுவரை எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும். படத்தின் டிரைலரை பார்த்தால் எக்ஸ்பெக்டேஷனை அதிகமாக்கி கொள்வார்கள் ரசிகர்கள் படத்தை அவர்கள் பார்த்து என்ஜாய் பண்ணட்டும்.

இதனால்தான் அவர்கள் இன்னும் டிரெய்லரை வெளியிடாமல் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.