ஊர் ஊராகச் சுற்றும் தல அஜித்…

*ஊர் ஊராக பைக்கில் பயணம் அஜித்*

நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து கொண்டு உள்ளார் அஜித்.

அதையொட்டி நடிகர் அஜீத் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் செய்து வருகிறார். பயணத்தின் இடையே தாஜ்மஹால் முன்புறம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினரோடு நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மற்றும் அவர் பைக்கில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் அஜீத் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ளது இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.