AK நான் ரெடி நீங்க ரெடியா..!

*AK*

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவலின் காரணமாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிப்போகியுள்ளது.

இதனிடையே தற்போது அஜித் குமாரின் 61வது திரைப்படத்தை மீண்டும் எச்.வினோத் இயக்கவுள்ளார் மற்றும் வலிமை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். எச்.வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத் குமாரை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமாரின் 61வது படத்தின் பூஜை வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் இந்த படத்திற்கான வில்லனை தேர்வு செய்யும் பணியில் உள்ளார்களாம். கூடிய விரைவில் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment