AK61 படத்தின் Title என்ன தெரியுமா

*AK61*

நடிகர் அஜித்குமார் தனது 61-வது படத்தில் வலிமை படத்தினுடைய இயக்குனர் எச்.வினோத்துடன் திரும்பவும் இணைய உள்ளார். AK61 என தற்காலிகமாக பெயிரிடப்பட்டுள்ள இந்தத் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய தகவலின்படி, AK61 திரைப்படத்தின் தலைப்பை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். திட்டமிட்டபடி நடந்தால் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மார்ச் மாதம் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆக்ஷன் திரில்லர் போன்ற கதைக்களம் என்று கூறப்படும் AK61 படத்தில் அஜித் குமார் ஹீரோ-வில்லன் கலந்த கலவையான பாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்கத்தில் இதுவரை கண்டிராத Getupஇல் நீண்ட தாடியுடன் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் ஸ்டைலிஷ் ஸ்டாராக தோன்றுகிறார் அஜித் குமார். மேலும் நடிகர் அஜித்குமார் இப்படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்கப் போவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் AK61 Getupஇல் அஜித்குமாரின் முதல் படத்தை வெளியிட்டார், படத்திற்கான நடிகரின் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரே வண்ணமுடைய படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

AK61 படத்திற்கான இசை அமைப்பாளர் ஜிப்ரான் என கூறப்படுகிறது, மேலும் மலையாளம் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

Ak61 திரைப்படத்திற்கான தலைப்பு வல்லமை என கூறப்படுகிறது, படத்திற்கான பூஜையை படக்குழு மார்ச் மாதம் 18ஆம் தேதி நடத்தப் போவதாக கூறப்படுகிறது, அன்று படத்தினுடைய தலைப்பு வெளியிடப்படும்.

Leave a Comment