அம்பானி ரத்தன் டாடா வீட்டுக் கல்யாணம்

*அம்பானி ரத்தன் டாடா*

சில வருடத்திற்கு முன்பு இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா ஆகிய இவர்களின் வீட்டில் கல்யாணம் நடந்தது.

முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம் மிக பிரமாண்டமாக எல்லோரும் பார்த்து வியக்கும் வகையில் இருந்தது. ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் இவர்களெல்லாம் முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்தில் சாப்பாடு பரிமாறினார். அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் கல்யாண அழைப்பு கொடுத்தனர்.

ஒரு கல்யாண அழைப்பிதழ்(Invitation Card) செலவே லட்ச்சத்திற்கு மேலென்று கூறப்பட்டது. ஆடம்பரமாக தடபுடலாக கல்யாணம் நடைபெற்றது.

அதே சமயத்தில் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா வீட்டிலும் கல்யாணம் நடந்தது. நிறைய நபர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் ரத்தன் டாடாவிற்க்கு ஒரு தம்பி இருக்கிறது என்று தெரியாது. அவருடைய பையனுக்கு தான் கல்யாணம் நடந்தது.

அந்தக் கல்யாணத்தில் ஆறு அல்லது ஏழு நபர்கள் தான் பங்கேற்றனர். அதில் பெண்ணுடைய பெற்றோர்கள், பையனுடைய பெற்றோர்கள், ரத்தன் டாடா மற்றும் சில நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.