துபாயிலும் ஒரு அருணாச்சலம்..?

*அருணாச்சலம்*

துபாயை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தனது யூடியூப் சேனல் வீடியோ விற்காக சேலஞ்ச் வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அந்த நபர் வீடியோ எடுப்பதற்காக துபாயில் உள்ள ஒரு மாலிற்க்கு செல்கிறார். இந்தச் சேலஞ்ச்இன் முறை என்னவென்றால் அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டை ஒருவரிடம் கொடுத்து ஐந்து நிமிடத்திற்குள் அந்தமாலில் இருக்கும் எந்தப் பொருளையும் வாங்கிக்கொள்ளலாம்.

அந்த நபர் மாலிற்க்கு சென்று போதுவாக ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் சென்று இந்த சேலஞ்சை கூறுகிறார். அவர் உண்மையிலே என்ன வேணாலும் வாங்கிக் கொள்ளலாமா என்று ஆச்சரியப்பட்டார்.

கிரெடிட் கார்டை அவரிடம் கொடுத்து ஐந்து நிமிடத்திற்குள் என்ன வேணாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அந்த நபர் கிரெடிட் கார்டை வாங்கிக்கொண்டு அவசரஅவசரமாக சேன்று அவருக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்.

அவர் வாங்கிய பிறகு மொத்தமாக அவர் வாங்கிய பொருட்களின் விலை 33,147 டாலர்கள் இந்திய மதிப்பின்படி 24,50,000. இதை அனைத்தையும் ஐந்து நிமிடத்திற்குள் வாங்கியுள்ளார்.

இதாவது பரவாயில்லை அடுத்ததாக அங்கு வந்த ஒரு பெண்ணிடம் இதே சேலஞ்சை கூறுகிறார். அந்தப் பெண் அதைக்கேட்டு ஆவலாக ஒப்புக்கொள்கிறார்.

அந்த பெண் வேகவேகமாக தேவையான பொருட்களை வாங்குகிறார். அந்தப் பெண் வாங்கியதை பார்த்து அந்தப் பணக்காரரே மிரண்டு போகிறார்.

அந்தப் பெண் வெறும் ஆடைகள் மற்றும் Shoesகளை மட்டும் தான் வாங்கினார். ஆனால் இதில் என்ன ட்விஸ்ட் என்றால் அந்தப் பெண் வாங்குன ஒரு Shoe மட்டுமே கிட்டத்தட்ட 90,000 டாலர்ஸ் அதாவது இந்திய மதிப்பின்படி 66,00,000.

அதன் பிறகு அந்தப் பெண் ஒட்டுமொத்தமாக 135,225,00 டாலர்ஸ் இந்திய மதிப்பின்படி 1 கோடிக்கு பொருள்களை வாங்கியுள்ளார்.

ஐந்து நிமிடத்தில் இலவசமாக ஒரு கோடி மதிப்பில் பொருள்களை வாங்கிச் சென்றுள்ளார் அந்த பெண்.

நமக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடி அளவிற்கு மதிப்புள்ள பொருள்களை வாங்குவோமா என்பது சந்தேகம்.