இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளர்க்கும் கிடைக்காத வாய்ப்பு

*இளையராஜா*

இசையால் எல்லோருடைய மனதையும் கொள்ளையடித்தவர் இசைஞானி இளையராஜா. இவர் 1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை தொடர்ந்தார்.

தற்போது இளையராஜாவின் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் விண்வெளியில் இசைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் எடை குறைவான சாட்டிலைடில் இளையராஜாவின் பாடல் இடம்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது இளையராஜாவின் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றடைய வைத்துள்ளது.