வாடகை தர மறுத்த அனிருத்

*அனிருத்*

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மீது தற்போது மிகப்பெரிய புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது அனிருத் சென்னையில் ஒரு மிகப்பெரிய ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து அதில் தான் தன்னுடைய இசையை Compose செய்து வருகிறார்.

அந்த ஸ்டூடியோவிற்கு மாதம் சுமார் ரூபாய் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் துபாயில் இருந்த நிலையில் அனிருத் அந்த ஸ்டூடியோவுக்கு வாடகை சில மாதங்களாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

வாடகை குறித்து அந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் பலமுறை அனிருத்தை தொடர்பு கொண்டபோதும் அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த உரிமையாளர் நேரடியாகவே சென்னை வந்துள்ளார்.

இதில் ஒரு திருப்பம் என்னவென்றால் ஸ்டுடியோவின் உரிமையாளர் சென்னை வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட அனிருத் உடனடியாக மும்பை சென்று விட்டாராம். ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் வாங்கும் இசையமைப்பாளர் அனிருத் ஒரு ஸ்டூடியோவின் வாடகை செலுத்த முடியவில்லையா என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.