அண்ணாத்த, மாநாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் போட்டி..?

*அண்ணாத்த,மாநாடு வசூல் போட்டி*

நவம்பர் 4 ஆம் தேதி ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் எந்த ஒரு பெரிய போட்டி இல்லாமல் வெளியானது எந்த ஒரு தடையும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் குவித்தது.

தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மாநாடு அண்ணாத்த இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் போட்டி ஆரம்பித்துள்ளது.

தீபாவளியன்று வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூன்று வாரங்களுக்கு மேல் எந்த ஒரு தடையுமின்றி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. விஷால் மற்றும் ஆர்யா நடித்து வெளிவந்த Enemy திரைப்படம் அண்ணாத்தையுடன் வெளியானது அப்படம் அண்ணாத்த படத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. அண்ணாத்த திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியபிறகு தற்போது சிம்பு நடித்து வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் அண்ணாத்த திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் போட்டி எழும்பியுள்ளது.

அண்ணாத்த திரைப்படம் கடந்த 3 வாரங்களாக திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டியது. தற்போது இப்படம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியானதால் அண்ணாத்த திரைப்படம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

வர்த்தக ஆய்வாளரான மனோபாலா விஜயபாலன் கூறுவது”அண்ணாத்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான முயற்சியாக மாறியுள்ளது“.

மனோபாலா விஜயபாலன் ட்விட்டர் சமூக வலைதளத்தில் செய்த ட்விட்டை கீழே காணலாம்: