
தொலைதூர கல்வி இயக்கம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பு மாணவர்களிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015க்கு பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் செல்லாது என அண்ணாமலை பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் சுமூக தீர்வு எடுக்கப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.