பரிதாபங்களுக்கு நடந்த பரிதாபம்..?

*பரிதாபங்களுக்கு நடந்த பரிதாபம்*

கோபி சுதாகர் இருவரும் இணைந்து தொடங்கியதுதான் பரிதாபங்கள் அதற்கு முன்னர் இவர்கள் இருவரும் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற சேனலில் பணிபுரிந்து வந்தனர் இவர்களது அரசியல் வீடியோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. சிவகங்கையை சேர்ந்தவர் கோபி திருச்சியை சேர்ந்தவர் சுதாகர். கோபி சுதாகர் இருவரும் பொறியியல் படித்தவர்கள்.

இருவரும் சிறு வயதிலிருந்தே மேடையில் நடிக்கும் திறன் பெற்றவர்கள். இதற்கு கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி படிப்பை முடித்து வெளியே வந்தனர். வந்த பிறகு எப்படியாவது நடிகனாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இருவரும் சென்னை சென்று நடிகர்களாகலாம் என முடிவு செய்து சென்னைக்கு கிளம்பினர்.

இவர்கள் முதல் முதலில் ஒரு யூடியூப் சேனலில் ரூபாய் 6 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் ஒரு அரசியல் கலாய் வீடியோ செய்து உள்ளனர் ஆனால் அந்த வீடியோவில் அந்த யூடியூப் சேனலில் பதிவிட வேண்டாம் என்று அந்த சேனலின் நிர்வாகி கூறியுள்ளார் ஆனால் அந்த வீடியோவின் மேலிருந்த நம்பிக்கையின் காரணமாக அந்த வீடியோவை கோபியும் சுதாகரும் ஒரு இரவு பதிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டனர் பின் திரும்பி வருகையில் பார்க்கும்போது அந்த வீடியோ பதிவிட்ட 3 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அதிகமாக பார்வையாளர்கள் அதனை பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவை கோபி மற்றும் சுதாகரின் வாழ்க்கையை மாற்றியது அந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்த காரணத்தினால் அந்த யூடியூப் சேனலில் நிர்வாகி கோபி மற்றும் சுதாகருக்கும் சம்பள உயர்வு மற்றும் ஒரு ஊரை சுற்றி பார்ப்பதற்காக அந்த சேனல் நிர்வாகம் அவர்களுக்கு ஒரு உல்லாச பயணத்திற்கும் பயணச்சீட்டு வழங்கினர். பின்பு அவர்கள் இருவரையும் வைத்து அந்த சேனல் ஒரு அரசியல் கலாய் சேனல் ஒன்றினை தொடங்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.

ஆனால் கோபியும் சுதாகரும் எங்களுக்கு மட்டும் சம்பள உயர்வு இல்லாமல் எங்களுடன் பணிபுரிந்த எடிட்டர் மற்றும் கேமராமேன் இருக்கும் சம்பள உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பின்பு அந்த சேனல் நிர்வாகி சிறிது மனஸ்தாபம் காரணத்தினால் கோபி சுதாகரன் அடுத்த அடுத்த வீடியோக்களை அவர்களது யூடியூப் சேனலில் பதிவிடவில்லை. அதன்பின்னர் அந்த சேனலில் இருந்து வெளியே வந்தனர்.

பின்பு வாய்ப்புக்காக பல தொலைக்காட்சிகளுக்கும் சென்றுள்ளனர் ஆனால் பல இடங்களில் அவர்களை அசிங்கப்படுத்தி விட்டனர். பிரபல தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் சென்றபோது நீங்கள் செய்வது எதுவும் சிரிப்பே வரவில்லை தயவுசெய்து வெளியே சென்று விடுவேன் என்றெல்லாம் அசிங்கப்படுத்தி உள்ளனர். பின்பு பல சேனல்களில் சிறிய சிறிய நிகழ்ச்சிகளில் வேலை செய்து வந்தனர்.

அதிலும் முழுமையாக மன நிறைவு பெறாத காரணத்தினால் அவர்கள் அதனையும் விட்டு விட்டு சொந்த ஊருக்கே திரும்பி செல்லலாம் என்ற நிலைக்கு ஆளானார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் இறுதி முயற்சியாக தொடங்கியதுதான் பரிதாபங்கள் இதில் பதிவு செய்த மற்றும் வெளியிட்ட அனைத்து வீடியோக்களும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவர்களின் அரசியல் வீடியோக்கள் அனைத்தும் மக்களிடையே நிறைய பார்வையாளர்களை ஈர்த்தன.

தற்போது பரிதாபங்கள் சேனலிர்கு 30 லட்சத்திற்கும் மேல் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் யூடியூபில் அதிகம் சம்பாதிக்கும் தமிழ் சேனல்களின் பட்டியலில் பரிதாபங்களும் ஒன்று.

தற்பொழுது அவர்கள் யூடியூப் மட்டுமன்றி படங்களிலும் நடித்து உள்ளனர் மீசைய முறுக்கு திரைப்படத்திலும் யோகிபாபு யாஷிகா ஆனந்த் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்த ஜாம்பி திரைப்படத்திலும் நடித்து உள்ளனர் இவர்களது விடா முயற்சியினாலும், இவர்களின் திறமையினாலும், இவர்களை அசிங்கப்படுத்தியவர்கள் இப்பொழுது இவர்கள் வெற்றியை கண்டு அஞ்சுகின்றனர்.