இரண்டு தினங்களுக்கு பேங்க் ஸ்ட்ரைக்..!

*பேங்க் ஸ்ட்ரைக்*

அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் இரண்டாவது நாளாக நடந்து வரும் நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க்(PNB) உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களின் சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பேங்க் ஆஃப் பரோடாவும் போராட்டத்தை தொடங்கியது. வேலை நிறுத்தம் காரணமாக தங்கள் கிளைகளில் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று SBI உள்ளிட்ட பொதுத்துறை கடன் வழங்குனர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் வங்கி செயல்பாடுகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் லட்சக்கணக்கான பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

SBI

ஒன்பது சங்கங்களின் குடை அமைப்பான United Forum of Bank Union (UFBU) டிசம்பர் 16 முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்ததால் சுமார் 8,590 வங்கிக் கிளைகள் மற்றும் பெரும்பாலான ஏடிஎம்களின் ஷட்டர்கள் பகலில் இயங்கவில்லை.

கிட்டத்தட்ட அனைத்து ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து உள்ளதால் இரண்டாவது நாளில் வேலைநிறுத்த அழைப்புக்கு எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை அரசு நிறைவேற்றினால் எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களை நடத்துவோம்” என்று UFBU அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.