BB தமிழ் 5 ஒரு போட்டியாளருக்கு இவ்வளவு சம்பளமா

*போட்டியாளருக்கு இவ்வளவு சம்பளமா*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளத்தின் தகவல் வெளிவந்துள்ளது.

சிபி, நிரூப், தாமரைச்செல்வி, ஐக்கி பேரி, சுருதி ஆகிய ஐந்து நபர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் சிபி பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி ரூபாய் 12 லட்சத்தை எடுத்துச் சென்றது குறிப்பிடதக்கது.

ரசிகர்களுக்கு அவ்வளவாக பிரபலமில்லாத கானா இசைவாணி மற்றும் அக்ஷரா ரெட்டி ஆகிய இருவருக்கும் ரூபாய் 15,000 ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

தற்போது இறுதி வாரத்தில் போட்டியாளர்களாக 5 நபர்களிள் பாவணிக்கு ரூபாய் 20,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. சின்ன பொண்ணு, அபினை மற்றும் அபிஷேக் ராஜாவுக்கு ரூபாய் 25,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

இமான் அண்ணாச்சிக்கு ரூபாய் 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி பிரியங்காவிற்க்கு ரூபாய் 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளரான வருன் எனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் விஜய் டிவி கௌரவமாக ஒரு தொகை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மக்களிடம் அதிகமான ஆதரவைப் பெற்ற போட்டியாளர் ராஜு. இவருக்கு ரூபாய் 25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.