BB 5 விட்டில் முத்தத்திற்கு பஞ்சம் இல்லை!

*முத்தத்திற்கு பஞ்சம் இல்லை*

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 79 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தெரியாத பல முகங்கள் தான் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் போட்டியாளர்கள் தான் அதிகம்.

இதில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 10 பேர் இதுவரை வெளியாகியுள்ளன. இரண்டு பேர் “Wild Card” என்ட்ரி மூலம் கலந்துகொண்டனர். தற்போது 10 பேர் இப்போது பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இருக்கும். இந்த சீசனில் நிறைய பேருக்கு திருமணம் ஆகியுள்ளது அதனால் காதல் என்ற ஒரு விஷயம் நடக்கவில்லை. இருப்பினும் தற்போது வருண்-அக்ஷரா ஆகிய இருவரைப் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் இருவரும் தாங்கள் ஒரு நல்ல நண்பர்கள் தான் என்று கூறி வருகின்றனர்.

அமீர் பாவனிக்கு தெரியாமல் முத்தம் கொடுத்திருந்தது ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அமீர்-பவானி கிசுகிசு விற்கும் முன்பே வருண்-அக்ஷரா கிசுகிசு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே வருண்-அக்ஷரா இருவரும் ஜிம் பார்ட்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா பெட்ரூமிற்கு தூங்கச் செல்லும்போது வருணின் காதுக்கு அருகில் முத்தம் கொடுத்துவிட்டுச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.