BB 5 வெற்றியாளர் இவர்தான் Vote வித்தியாசம்

*BB 5 வெற்றியாளர்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வந்தபிறகு தமிழ் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

கடந்த சீசன்களை விட இந்த சீசனில் மக்கள் அதிகமாக Vote செய்துள்ளார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வெற்றியாளர்களுக்கான Vote பட்டியலில் ஐந்தாவது இடத்தில் அமீர், நான்காவது இடத்தில் நிரூப், மூன்றாவது இடத்தில் பாவணி உள்ளார்கள்.

இவர்கள் மூன்று பேரையும் ஒவ்வொரு இறுதி வாரத்தில் ஒவ்வொரு நபராக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு அனைத்து சீசனிலும் நடப்பதுபோல கமல்ஹாசன் வீட்டிற்குள் சென்று இறுதியான இரண்டு போட்டியாளர்கள் ராஜு மற்றும் பிரியங்காவை வெளியில் அழைத்து வருவார்.

இறுதியில் மேடைக்கு அழைத்து வந்து ராஜுவை வின்னராகவும் மற்றும் பிரியங்காவை ரன்னராகவும் அறிவிப்பார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஆன்லைன் Voteஇன் முறைப்படிதான் இந்த தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சில பேர் பிரியங்கா விஜய் டிவியில் வேலை பார்ப்பவர் என்பதால் பிரியங்காவை தான் வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று கூறிவருகின்றனர்.

இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 5இன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.