BB 5 வெற்றியாளர் இவர்தான் மக்கள் கருத்து..!

*மக்கள் கருத்து*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பல விதத்தில் மக்களை கவர்ந்து வருகின்றன.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ராஜு, சிபி, சஞ்சீவ், பிரியங்கா, தாமரைச்செல்வி, நிரூப் மற்றும் அமீர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதில் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பவர் ராஜு.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடரில் நடித்து இருந்தார். அந்தத் தொடரில் நடித்ததாள் பல ரசிகர்கள் இவரை பின்பற்றினர். ஆனால் அதைவிட அதிகமான ரசிகர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு சம்பாதித்து விட்டார் ஏனென்றால் அவர் வீட்டிற்குள் நேர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் ரசிக்கும்படியாகவும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று ராஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் தினமும் பேச வேண்டும். தினமும் நான் என் அம்மாவிடம் பேசும்போது சாப்டியா போன்ற விஷயங்களை மட்டும் தான் கேட்பேன். மற்றபடி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் அவர் மனதில் என்ன இருக்கிறது எதை ஆசைப்படுகிறார்கள் என்பதைப்பற்றி எல்லாம் நான் தேரிந்துக்கொள்ள முயற்சித்தது இல்லை. இனி அந்த தவறை நான் செய்ய மாட்டேன். வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்ள போகிறேன். இதைத்தான் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் கற்றுக்கொண்டேன் என்று ராஜு கூறினார்.

இந்தக் கருத்தை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. பலர் இதற்காக ராஜுவை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ராஜுவிற்க்கு அதிக ஆதரவு இருக்கும் நிலையில் தற்போது இந்த செயல் மேலும் பெரும் ஆதரவை ஏற்படுத்தியுள்ளது.