மீண்டும் BB சீசன் 1 வருகிறது ஓவியா ம‌ற்று‌ம் வனிதா..?

*மீண்டும் BB*

பிக் பாஸ் OTT நிகழ்ச்சியை விரைவில் தொடங்கப் போகிறார்களாம். இதில் ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட ஜூலி மற்றும் வனிதா இருவரும் இருக்கப் போகிறார்களாம். இதைக் கேட்ட ரசிகர்கள் எப்போ இந்த நிகழ்ச்சியை தொடங்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் OTT நிகழ்ச்சி 42 நாட்கள் நடைபெற திட்டம் செய்து இருந்தார்களாம் ஆனால் தற்போது 70 நாட்கள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஐந்து சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதிலும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பிக்பாஸ் OTT நிகழ்ச்சியில் ஓவியா, அபிராமி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, சேரின், ஷாரிக், ஐஸ்வர்யா கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாமல் 24 மணி நேரமும் OTT தளத்தில் இந்த பிக் பாஸ் OTT நிகழ்ச்சியை ஒளிபரப்ப போகிறார்களாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் இதிலும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவுள்ளது