பீஸ்ட் பாடல் வெளியீடு

*பீஸ்ட் பாடல் வெளியீடு*

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெட்ஜ் மற்றும் டாக்டர் திரைப்படத்தில் நடித்த பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

சமூகத்தில் பீஸ்ட் படத்தின் எந்த ஒரு அப்டேட் வராததால் தளபதி ரசிகர்கள் அப்டேட் விடக்கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் வரும் பொங்கலுக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடல்(First Single) வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.

பொதுவாக தளபதி விஜயின் படம் என்றாலே எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இளமை இயக்குனர்கள் அவருடைய படத்தை இயக்கினால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும். கடந்த வருடம் பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏராளமாக உள்ளது.

பீஸ்ட் படத்தின் First Single பொங்கல் அன்று வெளியாகி விட்டால் அடுத்த அடுத்த மாதங்களில் பீஸ்ட் படத்தின் அப்டேட்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவிக் கிடக்கும்.