Beast திரைப்படத்தின் டிரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது

*Beast*

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் என கூறப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அரப்பிக்குத்து மற்றும் ஜாலிஓ ஜிம்கான என்ற பாடல்களை படக்குழு வெளியிட்டனர். அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வைரலாகி டிரேண்டாகி வருகிறது. அப்பாடல்கள் யூடியூப் வலைதளத்தில் 100 Millionக்கும் மேற்பட்டோர் பார்வைகள் பெற்றுள்ளன. தற்போது வரை இரு பாடல் தான் அதிகாரப்பூர்வமாக யூடியூப் தளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை சரியாக 6:00 மணி அளவில் பீஸ்ட் திரைப்படத்தினுடைய அதிகாரப்பூர்வமான ட்ரெய்லரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் யூடியூப் தளத்தில் வெளியிட உள்ளன, இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Beast Trailer