மீண்டும் விஜய் டிவி இல் வருகிறது அழகிய நினைவுகள்..!

*கனா காணும் காலங்கள்*

2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற தொடர் “கனா காணும் காலங்கள்“. இந்த தொடர் பள்ளியில் பயிலும் சிறுவர்களின் வாழ்க்கையை பற்றிய கதைக்களமாகும். இந்த தொடருக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பலர் சினிமா துறை செல்வதற்கு இத்தொடர் உதவியாக இருந்தது. குறிப்பாக இஃர்பான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, மோனிஷா, பாண்டி ஆகியோர் இத்தொடரில் நடித்து சினிமா துறையில் வாய்ப்பு பெற்றனர்.

இந்த தொடர் 90 கிட்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்த தொடராகும். இத்தொடர் ஒளிபரப்பாகிய காலத்தில் சீரியல் பார்ப்பவர்கள் அனைவருமே இத்தொடரை மறக்காமல் பார்ப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இத்தொடரில் நடித்தவர்கள் 15 வருடங்கள் கழித்து ஒன்றாக விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் பங்கேற்று கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த அனுபவத்தையும் ஆனந்தத்தையும் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.

தற்போது விஜய் டிவி கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வரப்போவதாக கூறியுள்ளது. இதற்கான ஒரு முன்னோட்டத்தையும் யூடியூபில் விஜய் டிவி பதிவிட்டுள்ளது.

புது Batch வரப்போகுது, புது Feel தரப்போகுது” என்ற வசனம் அந்த முன்னோட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் Disney+ Hotstarஇல் மட்டும்தான் ஒளிபரப்பாக போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.