பிக் பாஸ் சீசன் 5 தமிழ் புதிய தொகுப்பாளர் ரம்யா..?

*பிக் பாஸ் சீசன் 5 தமிழ்*

கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 2017 இல் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடர் அன்றிலிருந்து இன்றுவரை கமலஹாசன் தான் வரை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 நடந்து வருகிறது. இன் நிகழ்ச்சி 50 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமலஹாசன் அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளார் அதனால் அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை யார் தற்போது தொகுத்து வழங்குவார் என்று கேள்வி எழுந்தது.

விஜய்சேதுபதி, சிம்பு, ஸ்ருதிஹாசன் போன்றவர்கள்தான் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் கமல் வீடியோ காலில் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் கூறப்பட்டது. அது எல்லாம் இப்போது பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒரு அதிகாரபூர்வமான செய்தி கிடைத்துள்ளது அதாவது தமிழ் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் வரும் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் இதனால் இந்த வார சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்யாகிருஷ்ணன் 2019ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.