நிரூப்க்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த Bigg Boss

*நிரூப்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது தான் முடிந்துள்ளது இதில் ராஜு வெற்றி பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது விஜய் டிவி பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு புதிய சீசனை அறிமுகப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும்.

பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன இதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் கடந்த ஐந்து சீசன்களாக பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் பங்கேற்ற போகிறார்கள்.

குறிப்பாக ஓவியா, வனிதா, மீராமிதுன், பாலாஜி முருகதாஸ் போன்ற நபர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனையடுத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தாமரை செல்வி மற்றும் நிரூப் இருவரும் பங்கேற்கப் போவதாக கூறப்பட்டு வருகிறது.

நிரூப் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானவர். இந்நிலையில் தற்போது நிரூப்பிற்கு பிக்பாஸ் குழு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதேபோல் தாமரைச்செல்வி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றவர் அவரும் பிக்பாஸ் அல்டிமேடில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.