பிக் பாஸ் பாவனிக்கு அடிக்கு மேல் அடி

*பிக் பாஸ் பாவனி*

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் பாவனி ரெட்டி. தெலுங்கு சினிமாவில் உருதுணைக் கதாபாத்திரங்களிலும் செயல்களிலும் நடித்து வருபவர் இவர்.

சீரியல் ரெட்டை வால் குருவி மூலம் தமிழில் அறிமுகமானார் பின்பு பல தமிழ் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த பாவனிக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதை பாவனி அவரது சமூக வலைதளங்கள் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்றுப் பரவியுள்ளது, இதை என் நலம் விரும்பிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்துக்கொண்டேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.