Bigg Boss அல்டிமேட் Grand Launch Episode

*Bigg Boss அல்டிமேட்*

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்து சில வாரங்கள் தான் ஆகியுள்ளது, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி கூடிய விரைவில் வெளியாகப் போகிறது இதற்கான Promotionகளை ஆரம்பித்துவிட்டனர், விஜய் டிவியில் ஒளிபரப்பாமல் Disney+ Hotstarஇல் ஒளிபரப்ப போகின்றனர்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்ள போகின்றனர், கமல்ஹாசன் தான் இதைத் தொகுத்து வழங்கப் போகிறார்.

இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகின்றனர், ஏற்கனவே வனிதா, ஓவியா, பரணி, ஜூலி போன்ற நபர்கள் இதில் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.

தற்போது Disney+ Hotstar வனிதா, ஜூலி, பரணி, கஞ்சா கருப்பு, சுஜி இந்த ஐந்து நபர்களை போட்டியாளர்களாக உறுதி செய்யப் பட்டுள்ளார்கள் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளனர்.

ஆனால் ஓவியா இந்த வீட்டிற்குள் வருவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது ஏனென்றால் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதால் அவர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் இதனால் இவர் Wild Card Entry மூலம் வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் இரண்டாவது ப்ரோமோ வீடியோ இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது இதில் அனைத்து போட்டியாளர்களும் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment