Bigg Boss Ultimate யாரெல்லாம் வராங்க தெரியுமா

*Bigg Boss Ultimate*

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக வருடத்திற்கு ஒருமுறை பிக் பாஸ் சீசன் நடைபெறும். தற்போதுவரை பிக்பாஸ் ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் பல பிரபல முகங்களும் இதுவரை யாரும் பார்த்திராத முகங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் ஆதரவு பெற்ற நிகழ்ச்சி என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது அதாவது இதற்கு முன் நான்கு சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் Ultimate என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்று.

தற்போது அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உண்மையாகியுள்ளது. பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி தொடங்கப் போகிறது அதை Disney+ Hotstarல் மட்டும் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும். இதில் இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக வனிதா, பரணி, ஓவியா, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து ப்ரோமோ ஒன்று யூடியூப்பில் வெளியாகியுள்ளது.