Bitcoin இந்தியாவில் இருக்கு ஆனா இல்ல..?

*Bitcoin*

உலகத்தில் அதிகமாக Cryptocurrency பயன்படுத்தும் நாடு இந்தியா. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் Cryptocurrencyஐ பயன்படுத்துகிறார்கள். இது அனைத்தையும் இந்திய அரசாங்கம் தடை செய்யப் போவதாகக் கூறுகிறார்கள்?.

Cryptocurrencyஐ பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர் இதில் இந்தியா மேலோங்கி இருக்கிறது என்று கூறலாம். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஏதாவது ஒரு நாடு தடை சேய்ய முடியுமா?. சீனா இந்த Cryptocurrencyஐ வாங்கவோ அல்லது விற்கவோ தடை செய்துள்ளது.

El Salvador என்ற நாடில் முழுவதுமாக Cryptocurrencyக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இப்படி சில நாடுகளில் ஆதரவும் மற்றும் சில நாடுகளில் தடையும் Cryptocurrencyக்கு இருக்கிறது.

சமீபத்தில் இந்தியா Cryptocurrencyஐ தடை செய்யப் போகிறது என்ற தகவல் வெளிவந்தது. இது எந்த அளவுக்கு உண்மை இதை இந்திய பண்ணுமா என்று கேட்டால் பண்ணலாம் பண்ணாமலும் இருக்கலாம்.

இந்தியா எதை தடை செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால் ஒரு சில தனியார்(Private) Cryptocurrencyகளை தடை செய்யப் போகிறார்களாம். Private Cryptocurrency என்றாள் எங்கு இருந்து வருகிறது எப்படி வருகிறது என்று தெரியாமல் இருப்பது தான்.

அதுமட்டுமில்லாமல் இந்திய அரசாங்கம் ஒரு Digital Currencyயில் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அதை முழுமையாக கொண்டுவரப் போவதாகவும் கூறப்படுகிறது. என்ன செய்யப் போகிறார்கள் எப்படி கொண்டு வரப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை.

ஏன் இந்த Cryptocurrencyஐ ஒழுங்கு செய்ய முயற்சிக்கிறார்கள் என்றால் பண மோசடிகள், தீவிரவாத அமைப்பிற்கான நீதி வழங்குதல் மற்றும் வரி செலுத்தாமல் இருப்பது இப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்வதற்குத் தான்.

Leave a Comment