புனித் ராஜ்குமார் மரணத்தின் கசப்பான உண்மைகள்..?

*கண்ணட பவர் ஸ்டார்*

நேற்று மதியம் சுமார் ஒரு இரண்டு மணி அளவில் பெங்களூருவை சேர்ந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதற்குக் காரணம் அவருக்கு வெறும் நாற்பத்தி இரண்டு வயது மட்டுமே ஆகின்றது இவ்வளவு சிறிய வயதிலேயே ஒருவர் எப்படி மாரடைப்பினால் இழக்கலாம் என மக்களை குழம்ப வைத்துள்ளது.

புனித் ராஜ்குமார் பெங்களூருவின் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார் அவர் ஒரு திரைப்பட நடிகர் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படமே கோடானகோடி ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

அவர் திரைப்பட நடிகர் மட்டுமன்று அவர் பல நல்லதுகளையும் செய்துள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குவது ஆதரவற்றோர்களை அரவணைப்பது போன்ற பல நற்காரியங்களையும் செய்துள்ளார். இது போன்ற ஒரு மாமனிதர் மாரடைப்பினால் நாற்பத்தி இரண்டு வயதிலேயே இறந்து போனது திரையுலகினராளும் அவரது ரசிகர்களாலும் இந்திய மக்களாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாக இருக்கின்றது.

இறப்பதற்கு முந்தைய தினம் இசை வெளியீட்டு விழாவில் ஒன்றில் கலந்துகொண்டு தன் ரசிகர்களை சந்தித்துள்ளார் மற்றும் இறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படக் குழுவினரையும் வாழ்த்தியுள்ளார். மதிய நேரத்தில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் பிறகு சுமார் ஒரு இரண்டு மணி அளவில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி அவர் அங்கேயே உயிரிழந்தார்.

*இளம் வயதிலேயே மாரடைப்பு வர காரணம்*

இந்தியர்களுக்கு மற்ற நாட்டு மக்களை விட இதயம் பலவீனமானது பிறப்பாலே மட்டுமன்று அவர்கள் பழக்கவழக்கமும் அதற்கு முக்கிய காரணம். மற்ற நாட்டு மக்களை விட இந்திய நாட்டு ஆண்களுக்கு 50% மாரடைப்பு வருகின்றது அதில் 25 சதவீதம் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருகின்றது மற்றும் ஒரு நாளைக்கு 900 நபர்கள் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்தியாவில் மாரடைப்பால் இறக்கின்றனர் என டிரினிட்டி மருத்துவமனை அதன் கருத்துக்கணிப்பின் வாயிலாக தெரிவிக்கின்றது. இதற்கு மிகப்பெரிய காரணம் ஒழுங்காக உணவு உட்கொள்ளாததும், சத்தான உணவு உட்கொள்ளாததும், நேரத்திற்கு தூங்காததும், குறைவான உறக்கமும், உடற்பயிற்சி செய்யாததும், மற்றும் அதிக மன அழுத்தமே காரணம் எனக் கூறுகின்றனர்.

ஸ்போர்ப்ஸ் நாளிதழில் வெளிவந்த அறிக்கையின்படி முதல் வேலையிலிருந்து வெளியேறும்போது 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்றும் இரண்டாம் மூன்றாம் முறை வேலையை விட்டு வெளியேறும்போது 50% மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்றும் நான்காம் முறை வேலையை விட்டு வெளியேறும்போது 60% மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்று அந்த நாளிதழின் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரடைப்பு வருவதை சில அறிகுறிகள் வைத்துப் புரிந்து கொள்ளலாம் அது என்னவென்றால் அதிக மயக்கம், கால்கள் வீங்குவது, உடம்பு எடை கூடுவது போல் உணர்வது, கண்ணங்கள் வீங்குவது, தலைபாரம் கூடுவது போன்றவற்றைக் கொண்டு அறியலாம். இவ்வாறு அறிகுறிகள் தென்படும் போது சிறுவயதவர் ஆயினும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை சந்தித்து உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டும். வயதானவர்கள் மட்டுமே மாரடைப்பினால் அவதிப்படுவர் என்று நினைத்துக் கொள்ளாமல் சிறியவராயினும் மாரடைப்பினால் இறக்க வாய்ப்புண்டு என கவனத்தில் கொண்டு ஒழுங்காக நம் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும்.