12 வயதில் ரோபோட் செய்து அசத்திய சிறுவன்..!

*ரோபோட் செய்து அசத்திய சிறுவன்*

மொரோக்கோவைச் சார்ந்த ஹமௌட்டி முகமது பிலால் என்னும் 12 வயது சிறுவன் தனது படுக்கை அறையில் இருந்து ரோபோட்டுக்கலை உருவாக்குகிறான்.

இந்த 12 வயது சிறுவன் ஹமௌட்டி முகமது பிலாலின் கனவு அடுத்த எலோன் மஸ்க்காக ஆக வேண்டும் என்பதுதான்.

இந்த சிறுவன் என்னென்ன ரோபோட்டுக்களை கண்டுபிடித்துள்ளார் என்று பார்ப்போம்:

  • அவர் கை இயக்கத்துடன் செயல்படும் முகமூடியை உருவாக்குகியுள்ளார்.
  • தானாகத் திறக்கும் குப்பைத் தொட்டியை உருவாக்கியுள்ளார்.
  • மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்கள் அடையும் பொருட்களைப் பிடிக்க உதவும் ஒரு ரோபோட் கையை கூட அவர் உருவாக்கியுள்ளார்.

ஆனால் இதையெல்லாம் அவர் எங்கு கற்றுக் கொண்டார் அல்லது எதாவது யூனிவர்சிட்டியில் படித்தாரா?

இது எதுவும் இல்லை. அந்த சிறுவன் இவை எல்லாத்தையும் செய்வதற்கு இன்டர்நெட் மூலமாக தான் கற்றுக் கொண்டார்.

இந்த ஏழை மொராக்கோ குழந்தை இணையம் மற்றும் தனது சிறிய கைகளைப் பயன்படுத்தி மட்டுமே தேவைப்படும் மக்களுக்கு உதவ இயந்திரங்களை உருவாக்கியுள்ளார்.

திறமை எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை இச் சிறுவனின் செயல் காட்டுகிறது.