மொபைல் கவரை சரி செய்யலாமா..?

*மொபைல் கவரை சரி செய்யலாமா?*

இன்றைய காலகட்டத்தில் மொபைல் என்பது ஒருவரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மொபைலுக்கு அடிமையாக தான் உள்ளனர். மொபைல் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்னும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படிப்பட்ட மொபைலை கீழே விழாமல் பார்த்துக்கொள்வார்கள். அதற்கு முக்கியமாக மொபைலின் பின்புறம் ஒரு கவரை அணிந்திருப்பார்கள் அதற்குப் பெயர் பேக்கேஸ்.

அந்த பேக் கவரை பலரும் பல விதத்தில் பல வண்ணத்தில் பல வடிவத்தில் அறிந்திருப்பார்கள்.

புதிதாக மொபைல் வாங்கும் போது சில மொபைல்களுக்கு பேக் கவர் இலவசமாக வழங்கி இருப்பார்கள் அந்த பேக் கவர் இன் பெயர் ட்ரான்ஸ்பரண்ட்.

புதிதாக வாங்கியபோது அந்த ட்ரான்ஸ்பரண்ட் பேக்கேஸ் நல்ல வெள்ளை நிறம் வடிவில் இருக்கும். நாட்கள் ஆக ஆக அதைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கும்போது அதனுடைய நிறம் மங்கிப் போகும்.

இதைத் தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது…

சிறிதளவு உடைய ஒரு வடிவமான டப்பாவை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் உங்களுக்குப் பிடித்த நிறத்தில் உள்ள நெயில் பாலிசிகளை தண்ணீரில் கொட்டி விடவேண்டும். பிறகு நிறம் மங்கிய அந்த பேக் கேசை அந்த தண்ணீருக்குள் முக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை வெளியில் எடுத்து விட்டு சிறிது நேரம் காய விட்டாள் ஒரு அழகான வடிவில் நீங்கள் நினைத்தது போல் அந்த பேக்கேஸ் மாறிவிடும்.